About This Course
"வள்ளுவரும் வள்ளுவமும்" என்பது திருக்குறள்மணி தமிழ்க்குயில் கா. கலியபெருமாள் வழங்கும் திருக்குறள் கல்வித் தொடர். தமிழ், தமிழர் புலம்பெயர் ஆய்வு நிறுவனமும் Euleris.ai-யும் இணைந்து வழங்குகின்றன. வள்ளுவர் என்னும் மாந்தரையும் வள்ளுவம் என்னும் நெறியையும் வேறுபடுத்திக் காட்டுவது இதன் அடிப்படை. வள்ளுவர் வரலாறும் மரபுக் கதைகளும், திருவள்ளுவ மாலை, வள்ளுவர் ஆண்டு, பதினெண்கீழ்க்கணக்கு வகைப்பாடு, மூன்று பால்களும் 133 அதிகாரங்களும், குறள் வெண்பா யாப்பு, உரை மரபு, மொழிபெயர்ப்பு வரலாறு, நினைவிடங்கள் என விரியும் வினா-விடைக் காணொளித் தொகுப்பு. ஒவ்வொரு வினாவும் தனிக் காணொளியாக அமைந்து, விரும்பிய இடத்தில் தொடங்கிக் கற்கும் வாய்ப்பை நல்குகிறது. மரபுக் கதைகளை வரலாறாகக் காட்டாமல், ஆய்வுக் கண்ணாடி வழியே தெளிவுபடுத்துவது இதன் தனிச்சிறப்பு. குயிலார் வாழ்நாள் முழுதும் வளர்த்த குறள் அறிவை, தமிழ்கூறும் நல்லுலகுக்கு நிலைத்த கொடையாக்கும் முயற்சி இது.
What You'll Learn
- வள்ளுவர் வாழ்வில் மரபையும் வரலாற்றையும் பிரித்தறிதல்
- திருக்குறளின் அமைப்பை விளக்குதல்
- குறள் வெண்பாவின் அசை–சீர்–அடி–பா அமைப்பைப் பிரித்துக் காட்டுதல்